உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானுக்கு கோடி கோடியாக கொட்டும் அதிர்ச்சி | india vs pakistan | pahalgam attack | ADB | IMF

பாகிஸ்தானுக்கு கோடி கோடியாக கொட்டும் அதிர்ச்சி | india vs pakistan | pahalgam attack | ADB | IMF

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதன் பண மதிப்பு டோட்டலாக சரிந்து விட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பாகிஸ்தான் மக்கள் சிரமப்படுகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அரசோ பயங்கரவாதிகளை தீனி போட்டு வளர்க்கிறது. இன்னொரு பக்கம் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் கேட்டு கெஞ்சி வருகிறது. பகல்ஹாமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை காரணம் காட்டி, பாகிஸ்தானுக்கு நிதி அமைப்புகள் கடன் வழங்க கூடாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆசியன் வளர்ச்சி வங்கியில் பாகிஸ்தான் நிதி உதவி கோரி இருந்தது. எந்த காரணத்தை கொண்டும் கடன் கொடுக்க வேண்டாம் என்று இந்தியா சொன்னது. அப்படி கடன் கொடுத்தால், நிச்சயம் வளர்ச்சி பணிக்காக பாகிஸ்தான் செலவிடாது. பயங்கரவாதத்தை வளர்க்கவும், தங்களின் ராணுவ வலிமையை பெருக்கவும் தான் பயன்படுத்தும். மக்கள் பட்டினியில் கிடக்கும் போது, அவர்களுக்கு தேவையானதை செய்யாமல், அண்டை நாட்டுடன் பதற்றத்தை ஏற்படுத்தவே பணத்தை செலவிடும். எனவே தான் பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க வேண்டாம் என்று இந்தியா பலமுறை சொன்னது. இருப்பினும் இப்போது பாகிஸ்தானுக்கு ஆசியன் வளர்ச்சி வங்கி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 6,869 கோடி ரூபாய் உதவி வழங்க ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. ஆசியன் வளர்ச்சி வங்கி மட்டும் அல்ல. ஒரு மாதம் முன்பு தான் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியமும் பாகிஸ்தானுக்கு உதவியது. கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அள்ளிக்கொடுத்தது. அப்போதும் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் அதையும் மீறி பாகிஸ்தானுக்கு உதவி கிடைத்தது. மீண்டும் மீண்டும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைத்து இருப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே வெடித்த போர் 4 நாட்கள் தீவிரமாக நடந்தன. இதில் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கியதால் தோல்வியை ஒப்புக்கொண்டது. அதன் ராணுவ தளங்கள் கடும் சேதம் அடைந்தன. 6 போர் விமானம் உட்பட 9 விமானங்களை இழந்து விட்டது. இன்னும் முழு சேத விவரம் வெளியே வரவில்லை. இப்படியொரு சூழலில், சர்வதேச நிதி அமைப்புகள் வழங்கும் பணத்தை வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தாமல் நிச்சயம் ராணுவத்துக்கு தான் பாகிஸ்தான் செலவிடும். இது இந்தியாவுக்கு தேவையற்ற நெருக்கடியை உண்டு பண்ணும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை