உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை

படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை

இந்தியா -பாகிஸ்தான் இடையே தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த பின், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடந்தது. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லையில் எந்த தாக்குதலும் நடத்த கூடாது; எந்த ஆக்ரமிப்பு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பது பற்றி இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இரு நாட்டு எல்லையிலும் குவிக்கப்பட்ட படைகளை குறைப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலிக்கவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. முன்னதாக, சனிக்கிழமை மாலை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதால் சண்டை நிறுத்தப்பட்டது. அதன் பின்னும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதை நமது ராணுவம் முறியடித்ததாகவும், ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை