ரஷ்யா ஆயிலை நிறுத்தினால்... இந்தியாவுக்கு பகீர் | india vs us trade war |modi vs trump |russia oil
உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு இருக்கும் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகளுக்கும்; பேச்சு வார்த்தை மூலம் அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை தீர்க்காத நாடுகளுக்கும் அதிபர் டிரம்ப் அடாவடித்தனமாக வரி விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவுக்கு 2 கட்டமாக தலா 25 சதவீதம் வீதம் 50 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப். இதில் 25 சதவீத வரி அமலுக்கு வந்து விட்டது. இம்மாதம் இறுதியில் 50 சதவீத வரியும் அமலாகி விடும். இந்த வரியில் இருந்து தப்பிக்க ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய், காஸ், நிலக்கரி வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கெடு விதித்துள்ளார். அதுவரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு நடத்தப்போவதில்லை என்றும் அடாவடி காட்டி உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை ஈராக், சவுதி, அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் பெருமளவு கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. மூன்றாண்டுக்கு முன்பு உக்ரைன்-ரஷ்யா போர் வெடித்தது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் களம் இறங்கின. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. இதன் காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள், பொருளாதார தடைக்கு பயந்து அதை நிறுத்தின. உடனே மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷ்யா முன் வந்தது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது.