உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை அலறவிட வருது இந்தியாவின் 5ம் தலைமுறை அரக்கன் | ind vs pak | india's 5th gen fighter jet

பாகிஸ்தானை அலறவிட வருது இந்தியாவின் 5ம் தலைமுறை அரக்கன் | ind vs pak | india's 5th gen fighter jet

இந்தியா, பாகிஸ்தான் போர் 4 நாட்கள் மட்டுமே நடந்திருந்தாலும், தாக்குதல் நடந்த வேகம் உலக நாடுகளையே மிரள வைத்தது. காரணம், அணு ஆயுதம் தவிர பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள், ட்ரோன்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் என அனைத்து விதமான ஆயுதங்களையும் இரு நாடுகளும் பயன்படுத்தி விட்டன. இருப்பினும், இந்த போரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சக்தி வாய்ந்த ஏவுகணைகளும், போர் விமானங்களும் தான் முக்கிய காரணம். உதாரணத்துக்கு, போர் விமானங்கள் மூலம் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவி விட்டு தான், பாகிஸ்தானின் ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை இந்தியா தகர்த்தது. அதன் பிறகு தான் பாகிஸ்தான் பீதி அடைந்து அமைதி பேச்சுக்கு வந்தது. இப்படி சண்டையில் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், இன்னும் சக்தி வாய்ந்த போர் விமானங்களை தயாரிக்க இப்போது நம் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக எதிரிகளின் ராடார் கண்ணில் மண்டை தூவி விட்டு தாக்குதல் நடத்தும் ஸ்டீல்த் ரகத்தை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் கொடுத்துள்ளார். இப்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் மட்டும் தான் 5ம் தலைமுறை போர் விமானங்கள் இருக்கின்றன. துருக்கியும் இந்த ரக போர் விமானங்களை தயாரித்து விட்டதாக சொல்கிறது. இருப்பினும் பயிற்சி அளவிலேயே வைத்திருக்கிறது. இந்த நாடுகள் வரிசையில் தான் இப்போது இந்தியாவும் 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க முன் வந்துள்ளது. இது முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்கான மாடலை செய்து தர அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. டிசைன் தயாராகி வந்ததும் விமான தயாரிப்புக்கான அடுத்த கட்ட வேலைகள் துவங்கும். 5ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் முடிவை இந்தியா எடுத்ததற்கு பின்னால் பாகிஸ்தானும் சீனாவும் இருக்கின்றன. இப்போதைக்கு நம் வசம் ரஷ்யா, பிரான்ஸ் கொடுத்த போர் விமானங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரபேல், தேஜஸ் போர் விமானங்கள் தான் நம்மிடம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்தவை. இவை 4.5-ம் தலைமுறையை சேர்ந்தவை. அதே நேரம் பாகிஸ்தான் வசம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த போர் விமானம் என்றால், அது சீனா கொடுத்த J-10. இது நான்காம் தலைமுறையை சேர்ந்தது. நம் வசம் இருப்பதை விட சக்தி குறைந்த போர் விமானம் என்றாலும், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அளவில் சீனா உதவி செய்து வருகிறது. குறிப்பாக, தங்களின் சக்தி வாய்ந்த போர் விமானமான J-35 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மலிவு விலையில். இந்த J-35 ரக போர் விமானம் ஐந்தாம் தலைமுறையை சேர்ந்தது. இப்படி பாகிஸ்தான், சீனா பக்கம் இருந்து வரும் நெருக்கடியை சமாளிக்க தான் இந்தியாவுக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் படி 5ம் தலைமுறையான ஸ்டீல்த் மல்டி ரோல் போர் விமானம் தயாரிக்கப்படும். சிங்கிள் சீட், டபுல் இன்ஜினுடன் தயாரிக்கப்பட உள்ளது. இவை 2035ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரித்து முடிக்கும் போது, அவை நிச்சயம் சீனாவின் தயாரிப்பை விட மேம்பட்டதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறது நம் ராணுவ வட்டாரம்.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை