இறங்கி அடிக்கும் இந்தியா, அமெரிக்கா! பரபரப்பு அப்டேட் india america nuclear deal | Nuclear deal 2005
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் 2005 ஜூலையில் கையெழுத்தானது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 2008ல் இறுதியானது. இந்த ஒப்பந்தம், பல கட்டுப்பாடுகளால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதனால், அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்கள் இடையே அணுசக்தி உற்பத்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுப்பட்டுள்ளது. பல துறைகளில் இணைந்து செயல்படும் கூட்டாளிகள் என்ற நிலைக்கு இரு தரப்பு உறவு உயர்ந்துள்ளது.