119 செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை India banned 119 apps Google Play Store
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது டிக்டாக். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை உச்சம் தொட்ட 2020ம் ஆண்டில் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர், கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை அதிரடியாக செய்தது. பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட செயலிகளை தடை செய்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள், இந்த செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், திடீர் தடையால் செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில், மேலும் 119 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.