போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு கண்டனம் India - Pakistan War| Indian Army warns Pakis
ஜம்மு - காஷ்மீரின் பஹங்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான உறவுகளை இந்தியா துண்டித்தது. காஷ்மீர் எல்லையில் இந்திய படைகளை குறி வைத்து பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. நமது வீரர்களும் பதிலடி கொடுத்து வருவதால் பதட்டம் நிலவுகிறது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல், பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரலுடன் ஹாட்லைனில் பேச்சு நடத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலை நீடித்தால், இந்தியாவும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது. இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்திய ராணுவத்தின் இந்த கண்டனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.