பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை ஆதரிக்க முடியாது: யுஏஇ Indian delegates UAE Visit|Shrikant Shinde
பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய முப்படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் களத்தில் இறங்கி, இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இந்திய தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதுடன், அவர்களின் உடலுக்கு பாக்., தேசிய கொடி பாேர்த்தி, அரசு மரியாதை வழங்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக நம் படைகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு முக்கிய விமான தளங்கள் தகர்க்கப்பட்டன. இந்தியாவின் ஆக்ரோஷமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், சர்வதேச நாடுகளிடம் முறையிட்டது. நம் ராணுவ தலைமையிடம் அவசரமாக பேச்சு நடத்தி சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் பெற்றது. இதையடுத்து, இந்தியா தான், பாகிஸ்தான் மீது தேவையில்லாமல் போர் தொடுத்ததாக சர்வதேச நாடுகளிடம் பாக்., அவதுாறு பரப்பியது.