உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய சிலைகளை ஒப்படைப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி

இந்திய சிலைகளை ஒப்படைப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி

#IndianIdolsReturnedforAustralia #AustraliaGivestheIdolstoIndia #IndianIdols #KarthikeyaIdol #Badrakali #Nandi பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீசை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன், இங்கிருந்து கடத்திச் செல்லப்பட்டு, தற்போது ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள மூன்று பழங்கால கடவுள் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு பிரதமர் உறுதி அளித்துள்ளார். அதன் படி, திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான, பத்ரகாளி அம்மன் உலோகச் சிலை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளது. இது, 13 முதல் 16ம் நுாற்றாண்டை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. அதே போல், அதே கோவிலை சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட நந்தி சிலையும் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த கற்சிலையும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தை சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேய சுவாமி கற்சிலையும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலை 11ம் நுாற்றாண்டை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, ஆஸ்திரேலியாவில் உள்ள நம் பழங்கால சிலைகள் மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ஜூலை 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி