இந்திய ஐடி நிபுணரை அமெரிக்க போலீஸ் சுட்ட பயங்கரம் indian techie shot by us cops | techie nizamuddin
இந்திய ஐடி ஊழியர் சுட்டு சரிப்பு அமெரிக்க போலீசாரால் அதிர்ச்சி கலிபோர்னியா பகீர் பின்னணி என்ன? அமெரிக்காவில் வைத்து இந்திய ஐடி நிபுணரை அந்நாட்டு போலீசார் சுட்டுக்கொன்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவின் மஹபூப்நகரை சேர்ந்த ஐடி ஊழியர் முகமது நிஜாமுதீன் வயது 29. இவர் மேற்படிப்புக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றார். படிப்பு முடிந்ததும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தங்கி இருந்து வேலை பார்த்தார். செப்டம்பர் 3ம் தேதி முகமது நிஜாமுதீனை அமெரிக்க போலீசார் சுட்டு கொன்று இருக்கின்றனர். 2 வாரம் கழித்து இப்போது தான் இது பற்றி நிஜாமுதீன் குடும்பத்துக்கு தகவல் தெரிய வந்து இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நிஜாமுதீனின் நண்பர் ஒருவர் இது பற்றி அவரது தந்தை முகமது ஹஸ்னுதீனுக்கு தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் சடலத்தை மீட்க உதவி கேட்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். எனது மகன் 3ம் தேதி அமெரிக்க போலீசாரார் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. மகன் சடலத்தை மீட்டு தர வேண்டும். சம்பவம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதற்கிடையே செப்டம்பர் 3ம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி முதல் கட்ட தகவலை அமெரிக்க போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பது: சாண்டா கிளாராவில் நிஜாமுதீன் தனது நண்பர்களுடன் தங்கி இருக்கும் அறையில் சண்டை நடப்பதாக செப்டம்பர் 3ம் தேதி காலை 6 மணி அளவில் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தோம். நிஜாமுதீன் சக நண்பர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார். அவரது கையில் கத்தி இருந்தது. சண்டையில் கொலை நடக்கும் அபாயம் இருந்தது. ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தோம். எனவே தான் துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் நிஜாமுதீன் இறந்து விட்டார். காப்பாற்றப்பட்ட நபர் சிகிச்சையில் இருக்கிறார். நிஜாமுதீன் சடலம் மற்ற சம்பிரதாயங்களுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் கூறினர்.