இந்தியா அடியில் பாகிஸ்தான் கதறியது இதற்குதான் india vs pakistan | pahalgam attack | brahmos missile
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. 4 நாட்கள் நீடித்த இந்த போரில் பாகிஸ்தானுக்கு இந்தியா மிகப்பெரிய பதிலடியை கொடுத்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறி வைத்து பிரமோஸ் உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இந்தியா வீசியது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் உட்பட 11 விமானப்படை தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம் மற்றும் நிறுத்தி வைத்திருக்கும் இடம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது. இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது. இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியே வந்திருந்தன.