இந்தியா சிதைத்த பாகிஸ்தானின் 3 முக்கிய இடம்-முழு தகவல் | india attacks pakistan airbase | ind vs pak
இந்தியா சிதைத்த பாகிஸ்தானின் 3 முக்கிய இடம்-முழு தகவல் | india attacks pakistan airbase | ind vs pak ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து மூன்று நாட்களாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுக்கிறது. இரவோடு இரவாக 26 நகரங்களை ட்ரோன், ஏவுகணை மூலம் பாகிஸ்தான் குறி வைத்தது. இதை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 3 முக்கியமான விமான படை தளங்களை ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அனுப்பி இந்தியா பந்தாடியது. குறிப்பாக ராவல்பிண்டியில் உள்ள Nur Khan விமான படை தளம் மீது இந்தியா சரமாரியாக குண்டு வீசியது. இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. அதே போல் பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்துக்கு மிகவும் பக்கத்தில் உள்ளது. நூர் கானில் இருப்பது தான் பாகிஸ்தானின் விமான படை தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று. எப்போதும் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு இருக்கும். ஆனால் இதையும் தாண்டி இந்தியா நேர்த்தியாக குண்டு வீசி பாகிஸ்தானை மிரள வைத்து இருக்கிறது. இவ்வளவு தூரம் உள்ளே சென்று தாக்கியதன் மூலம், இந்தியாவால் எதையும் செய்ய முடியும் என்பதை பாகிஸ்தானுக்கு ஒரு செய்தியாக நம் ராணுவம் சொல்லி இருக்கிறது. அடுத்ததாக சாவாலில் chakwal உள்ள முரிட் விமான படை தளத்தை இந்தியா குண்டு வீசி தாக்கியது.