உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் தலையில் அமெரிக்கா இறக்கிய பேரிடி | kashmir pahalgam attack | india vs pakistan

பாகிஸ்தான் தலையில் அமெரிக்கா இறக்கிய பேரிடி | kashmir pahalgam attack | india vs pakistan

பாகிஸ்தான் தலையில் அமெரிக்கா இறக்கிய பேரிடி | kashmir pahalgam attack | india vs pakistan காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தான் ஆதரவுடன் அந்நாட்டின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. எந்த நேரமும் பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசி உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில்: அணு ஆயுதம் வைத்திருக்கும் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடிப்பது நிச்சயம் கவலை அளிக்கிறது. இரு நாட்டு தலைவர்களுடனும் அமெரிக்க தொடர்பில் இருக்கிறது. நடப்பதை உன்னிப்பாக கவனித்தும் வருகிறது.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி