உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானி செயலால் உயிர் தப்பிய 165 பேர் | IndiGo flight | Hyderabad flight | Chennai

விமானி செயலால் உயிர் தப்பிய 165 பேர் | IndiGo flight | Hyderabad flight | Chennai

சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு இன்று மாலை 3.40க்கு இண்டிகோ விமானம் கிளம்பியது. 159 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர். நெல்லூரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார். மாலை 4.30 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறு ஏற்பட்ட விமானத்தை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுத்ததால் 165 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி உள்ளனர்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ