உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட 2 பேருக்கு காப்பு! | Insta Reels | Viral Video | Nellai Police

அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட 2 பேருக்கு காப்பு! | Insta Reels | Viral Video | Nellai Police

திருநெல்வேலி நான்குநேரி தாமரைகுளத்தை சேர்ந்தவர்கள் மாடசாமி வயது 22, வக்கீம் பாண்டியன் வயது 19. இவர்கள் அரிவாளை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களுடன் வீடியோ வெளியிட்டனர். அரிவாளை வாயில் கவ்வி கொண்டும் , வரிசையாக அடுக்கி வைத்து அதி விரைவில் மற்றும் எதிரி தலையை சிதைக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிட்டனர். சர்ச்சையான இந்த வீடியோ வைரலாகி போலீஸ் கவனத்துக்கு சென்றது. விஜயநாராயணம் எஸ்ஐ உதயலெட்சுமி வழக்கு பதிந்து விசாரித்தார். இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட மாடசாமி மற்றும் வக்கீம் பாண்டியன் கைது செய்யப்பட்டனர்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !