உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடற்புழு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் | Intestinal worms | Deworming tablets | Doctors warning | P

குடற்புழு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் | Intestinal worms | Deworming tablets | Doctors warning | P

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் மண்ணில் பரவும் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த புழுக்கள் மனித குடலில் உள்ள ரத்தம், உணவை உண்கின்றன. இவற்றால் சாதாரண தொற்று உள்ளவர்களுக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சோர்வு, பசியின்மை போன்றவை இருக்கலாம். நாள்பட்ட குடற்புழு தொற்று உள்ள குழந்தைகள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைவு, மூளை செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவற்றை தடுக்கவே தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை