ஐஎன்டியுசி தொழிற்சங்க கூட்டத்தில் வெளிப்பட்ட கோஷ்டி மோதல்
ஐஎன்டியுசி எனப்படும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 252வது மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடந்த மாநில தலைவர் ஜெகநாதன் ஏற்பாடு செய்து இருந்தார். பல மாவட்டங்களில் இருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் தொடங்கும் நேரத்திற்கு முன்னதாவே ஆதரவாளர்களுடன் வந்த மாநில பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், தன்னிச்சையாக செயற்குழு கூட்டத்தை நடத்தினார். இதனால், மாநில தலைவர் ஜெகநாதன் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்ததால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாநில பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் வைத்திருந்த பேனரை, எதிர் தரப்பினர் கிழித்து அப்புறப்படுத்தினர். breath போலீசார் இரு தரப்பினரையும் தடுத்தனர். செயற்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்பதற்கான கோர்ட் உத்தரவு இருப்பதாக போலீசாரிடம் கூறிய பன்னீர் செல்வம் தரப்பினர் மாநில செயற்குழு முடிந்துவிட்டதாக கூறி அங்கிருந்து கிளம்பி சென்றனர்.