சம்பவ இடத்தில் சிக்கிய முக்கிய தடயங்கள்! 2 தனிப்படைகள் அமைப்பு |Investigation |Karaikudi| Crime
சிவகங்கை காரைக்குடி அருகே ஆவுடை பொய்கை பகுதி உள்ளது. இங்குள்ள சாய்பாபா நகரில் ஆள் நடமாட்டமில்லாத காட்டு பகுதியில் சொசுகு கார் ஒன்று ரத்த கரையுடன் நின்றது. இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் பெண் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மோக்லி அழைத்து வரப்பட்டது. கார் அருகே சிதறி கிடந்த கம்மல் மற்றும் 30 மீட்டர் தொலைவில் அப்பெண்ணின் செல்போனை அடையாளம் காட்டியது. காரில் இருந்த கைரேகைகள் உட்பட இவை அனைத்தையும் தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றினர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மகேஸ்வரி என்பது தெரிந்தது. மகேஸ்வரிக்கு வயது 38. இவரது கணவர் பாண்டிக்குமார், வெளிநாட்டில் வேலை செய்கிறார். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இன்று காலை நிலம் வாங்குவதற்காக சாய்பாபா நகருக்கு காரில் வந்துள்ளார்.