உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 7 பேர் கைது! ₹1 கோடி ரொக்கம் பறிமுதல் | IPL gambling | Coimbatore | Coimbatore Kattur police

7 பேர் கைது! ₹1 கோடி ரொக்கம் பறிமுதல் | IPL gambling | Coimbatore | Coimbatore Kattur police

ஐபிஎல் சூதாட்டம் நடந்து வருவதாக கோவை காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிலரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தனர். ஒரு அறையில் இருந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறினர். சந்தேகத்துக்குரிய அந்த கும்பலை மடக்கி அறையை சோதனை செய்தனர். ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. விசாரணையில் வாலிபர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டனர். 2 கார், பைக்குகள், 12 செல்போன்கள், லேப்டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். எந்த அணியை வைத்து இவர்கள் சூதாடினர். வழக்கமாக இதே போல் விளையாடுபவர்களா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை