ஈரானை புரட்டிப்போட்ட கலவரம்-பகீர் பின்னணி | iran protest | Trump vs Ali Khamenei | Israel vs Iran
ொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தானில் வெடித்த போராட்டம் போல ஈரானிலும் மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக டிசம்பர் 28ம் தேதி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியால் 14 லட்சத்து 20 ஆயிரமாக சரிந்தது. இதனால் ஈரானில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் ஏறியது. மக்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டனர். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் உச்ச தலைவர் கமெனி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட பல முக்கிய இடங்களில் மக்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு வாரம் மேலாக நீடிக்கும் போராட்டத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவமும் போலீசாரும் மக்களை தடுத்ததால் டெஹ்ரானில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களும் வீரர்களும் கடுமையாக மோதினர். போராட்டத்தை கலைக்க தடியடி நடத்துவதும், கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும் தொடர்கிறது. இதுவரை நடந்த வன்முறையில் 35க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் அப்பாவி சிறுவர்கள். அமெரிக்கா போட்ட பொருளாதார தடைகள், பணவீக்கம், பெட்ரோல் விலை மாற்றம் போன்றவை ஈரான் பொருளாதாரம் பலவீனமடைய முக்கிய காரணம். சமீபத்தில் இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலும், அந்த நாடுகளை எதிர்த்து சண்டை செய்ய ஈரான் செலவிட்ட பணமும் பாதிப்புக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. மக்கள் போராட்டம் காரணமாக ஈரான் மத்திய வங்கி கவர்னர் முமமது ரெசா ஃபர்சின் ராஜினாமா செய்தார். #IranProtest #TrumpVsAliKhamenei #IsraelVsIran #IranWithMe #MiddleEastTensions #FreedomForIran #Geopolitics #PoliticalDebate #HumanRights #DemocracyInIran #IranianVoices #KhameneiCritique #TrumpPolitics #RegionalConflict #IranianResistance #CrisisInIran #MiddleEastConflict #VoicesOfDissent #ChangingIran