உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிபந்தனையை ஏற்கும் வரை ஹார்முஸை திறக்க முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி | Iran US war | Trump

நிபந்தனையை ஏற்கும் வரை ஹார்முஸை திறக்க முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி | Iran US war | Trump

இனியும் காத்திருக்க முடியாது காலத்தை வீணடிக்க கூடாது நிபந்தனையை ஏற்காவிட்டால் நீங்கள் சொல்வது நடக்காது! ஈரான் - அமெரிக்கா இடையே பல மாதங்களாக நடக்கும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈரான் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்ததில், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் முற்றிலும் அழிந்தன. குடியிருப்புகள், எண்ணெய் கிணறுகள், கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகள், மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, அண்டை நாடுகளில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவியது. ஜூன் மாதம் இரு தரப்பு சமாதான நடவடிக்கைக்காக, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. அதன் படி, ஈரான் சார்பில் ஏழு முக்கிய நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் அது குறித்து பரிசீலிப்பதாக கூறிய அமெரிக்கா, அதன் பின் ஈரான் மீது மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, ஜூலை மாதம் முதல் இரு தரப்பு சண்டை மீண்டும் தீவிரம் அடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்கள் கடப்பதில் சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், ஈரானுடன் மீண்டும் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்கா தயார் எனவும், அது குறித்து மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே, ஈரான் பார்லிமென்ட்டில் பேசிய அந்நாட்டு பார்லி சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் கூறியதாவது: ஈரான் இனியும் யாருக்காகவும் காத்திருக்க தயாராக இல்லை. ஏற்கனவே நடந்த அமைதிப் பேச்சின் போது ஈரான் முன்மொழிந்த 7 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க வேண்டும். அவர்கள் ஒரு தரப்பில் முடிவெடுக்கும் நாடாக இனியும் இருக்க முடியாது. இனியும் நேரத்தை வீணடிக்க முடியாது. எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடியே இருக்கும். அதை திறக்க முடியாது. எங்கள் நிபந்தனைகளை ஏற்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை என முகமது பாகெர் பேசினார்.

அக் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை