/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் பல நாட்டு பயணிகள்! Iran War | USA | Isrel | MiddleEast
சென்னை ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் பல நாட்டு பயணிகள்! Iran War | USA | Isrel | MiddleEast
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படைகள் திடீர் தாக்குதலை தொடங்கின. பதிலுக்கு ஈரான் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழி பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையில் இருந்து, நள்ளிரவு வரை, துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட், இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மார் 01, 2026