பீஸ் பீஸ்சான ஈரான் துறைமுகம்: உலுக்கும் மர்மம் | Explosion Iran | Shahid Rajee port
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் பயங்கர வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் 100 அடி உயரத்துக்கும் மேல் கரும்புகை எழும்பியது. அதிர்வுகள் பல கிலோமீட்டர் தள்ளி உணரப்பட்டது. இது எப்படி நடந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. IRGC எனப்படும் இஸ்லாமிக் படையின் கப்பல் தளம் அருகே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது.