மயிலாடுதுறையில் கைதானவர்களின் பகீர் பின்னணி | ISIS | NIA | Chennai
மயிலாடுதுறை அரங்கக்குடி காயுதே மில்லத் தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான். அமெரிக்காவில் பெட்ரோல் பங்க் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். ரிஸ்வானுக்கும் தஞ்சாவூரை சேர்ந்த ரமீஷ் பர்வீன் என்பவருக்கும் 2013ல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக 2023ல் விவாகரத்து ஆனது. ரமீஷ் பர்வினுக்கு ஆதரவாக சிலர் வாட்ஸாப் மூலம் ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை மிரட்டியுள்ளனர். 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து ஹிதயத்துல்லா மயிலாடுதுறை எஸ்பி ஆபீஸில் புகார் கொடுத்தார். செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜூலை 23, 2024