ஹமாசை கருவறுத்தது இஸ்ரேல்-ஷாக் ரிப்போர்ட் | Israel vs Hamas | Israel vs Hezbollah | Iron
சரிந்தது ஹமாஸ் சாம்ராஜ்யம் இஸ்ரேல் கொடுத்த மெகா அடி விழுந்தது 18,000 விக்கெட் இஸ்ரேல்-ஹமாஸ் போர் துவங்கி சரியாக ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இதே அக்டோபர் 7ம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல் தான் போருக்கு வித்திட்டது. முதல் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இஸ்ரேல் திருப்பி அடிக்க துவங்கியது. ஹமாஸ் போர் ஒரு ஆண்டை எட்டியுள்ள நிலையில் இது தொடர்பான புள்ளி விவரங்களை இஸ்ரேல் ராணுவம் இப்போது வெளியிட்டுள்ளது. ஒரு ஆண்டு போரில் காசாவில் மட்டும் 17 ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை தீர்த்துக்கட்டி உள்ளோம். முதல் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு அப்போதே பதிலடி கொடுத்தோம். இஸ்ரேல் எல்லைக்குள் வைத்தே 1000 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றோம். கொல்லப்பட்ட 18 ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளில் 8 பேர் படை தளபதிகள். 30 பேர் பட்டாலியன் தளபதிகள். 165 பேர் ஹமாஸ் கம்பெனி தளபதிகள் ஆவர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் 40,300 இலக்குகளை குறி வைத்து அழித்து விட்டோம். 4,700 பதுங்கு குழிகள், சுரங்கங்களையும் அழித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. ஹமாசுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் துவங்கியதும், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்பு கொந்தளித்தது. ஹமாசுக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. கிட்டத்தட்ட ஹமாஸ் கதையை முடித்த நிலையில், ஹெஸ்புலா பக்கம் இஸ்ரேல் கவனம் திரும்பியது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஹெஸ்புலாவை குறி வைத்து அடிக்கிறது. இந்த சண்டை இப்போது தீவிர போராக மாறி இருக்கிறது.