உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அது மட்டும் வேண்டாமே! இஸ்ரேலுக்கு பைடன் அட்வைஸ் Israel| Usa| biden advice| iran oil sites

அது மட்டும் வேண்டாமே! இஸ்ரேலுக்கு பைடன் அட்வைஸ் Israel| Usa| biden advice| iran oil sites

லெபனானில் ஹெஸ்புலா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹெஸ்புலாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்கியது. இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி தாக்கியது, மத்திய கிழக்கில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் பெரிய தவறு செய்துவிட்டது. எங்களை அடித்தவர்களை சும்மா விடமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்தார். அதே சமயம் ஈரானுக்கு உடனடியாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. தங்களை விட சக்திவாய்ந்த ஈரானுக்கு பல மடங்கு பலமான பதிலடி தர வேண்டும் என நினைக்கிறது இஸ்ரேல். அதற்காக ஈரானின் எண்ணெய் வளங்களை குறிவைக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அது நடந்தால் ஈரான் மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இச்சூழலில், எண்ணெய் ஆலைகளை தாக்குவது வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். இஸ்ரேல் இடத்தில் நான் இருந்திருந்தால் எண்ணெய் வளங்களை தாக்குவதற்கு பதிலாக வேறு இலக்குகளை குறிவைப்பது பற்றி பரிசீலித்து இருப்பேன். இஸ்ரேல் அடுத்த அடியை தீர்மானிக்கும்போது, தங்களுக்கு ஆதரவு தரும் அமெரிக்காவையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ