உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் போரில் இந்தியா தலையிட்டதால் பரபரப்பு | Israel vs Hamas | Gaza war resume | india on israel

இஸ்ரேல் போரில் இந்தியா தலையிட்டதால் பரபரப்பு | Israel vs Hamas | Gaza war resume | india on israel

15 மாதங்களாக நடந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஜனவரி 19ல் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்தின. ஒப்பந்தப்படி 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், பாலஸ்தீன் மக்கள் என 2000 பேரை இஸ்ரேல் விடுவித்தது. முதல் கட்ட போர் நிறுத்தம் முடிந்ததும், 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சு துவங்கியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஒரே நேரத்தில் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் சொன்னது. ஹமாஸ் இதை ஏற்க மறுத்ததால் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கைக்கு ஹமாஸ் அடிபணியவில்லை. இதனால் ஹமாசுக்கு உலக நாடுகள் வழங்கி வந்த அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியது.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை