உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலஸ்தீனியர்கள் மேல் யூத முத்திரை! இஸ்ரேல் பகீர் செயல் | israel vs hamas | star of david | hostages

பாலஸ்தீனியர்கள் மேல் யூத முத்திரை! இஸ்ரேல் பகீர் செயல் | israel vs hamas | star of david | hostages

பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதியான காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 16 மாதங்களாக தீவிர போர் நடந்தது. இந்த போரில் காசா முனையையே உரு தெரியாமல் சிதைத்து விட்டது இஸ்ரேல் ராணுவம். பல லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக வெளியேறினர். ஹமாஸ் பயங்கரவாதிகள் உட்பட 47 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு வழியாக 16 மாதங்கள் கழித்து, அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் எடுத்த முயற்சியால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஜனவரி 16ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. முதல் கட்டமாக 42 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஹமாஸ் வசம் இருக்கும் 94 பிணைக்கைதிகளில் 33 பேரை விடுவிக்க வேண்டும்; பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதன்படி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்கள் முன்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி விட்டது என்று ஹமாஸ் குற்றம் சாட்டியது. இதே குற்றச்சாட்டை ஹமாஸ் மீது இஸ்ரேலும் சுமத்தியது.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி