காசாவை பிடுங்கி இஸ்ரேலிடம் கொடுக்கும் டிரம்ப்? Gaza in israel| Israel vs Hamas | Trump gaza plan
காசாவை காலி செய்ய வேண்டும் என்று சொல்லும் டிரம்ப், அடுத்து அங்கு என்ன நடக்கும் என்பதை சொல்லவில்லை. அப்படி என்றால் காசா முனையின் நிலை என்ன? அடுத்து யார் கைக்கு போகும்? அப்படியே கைவிடப்படுமா? அல்லது இஸ்ரேல் அதை கைப்பற்றுமா? என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. காசா முனையை பொறுத்தவரை, அது பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதி. ஆனால் பாலஸ்தீனுடன் சேர்ந்து இல்லை. தனி துண்டாக கிடைக்கிறது. இஸ்ரேலுக்கும் கடலுக்கும் இடையில் நீள வாக்கில் காசா முனை அமைந்துள்ளது. சுற்றிலும் இஸ்ரேல் தான் இருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனை ஒப்பிடும் போது காசா மிகவும் சிறிய இடம். இதன் மொத்த பரப்பளவு 350 சதுர கிலோ மீட்டர். கிட்டத்தட்ட மதுரை நகரை போல் 2 மடங்கு பெரியது. மொத்த பாலஸ்தீன் நாட்டின் 20ல் ஒரு பங்கு ஏரியா காசாவில் உள்ளது. என்னதான் பாலஸ்தீன் நாட்டின் அங்கமாக காசா இருந்தாலும், பாலஸ்தீன் பகுதியை ஆளும் கவர்மென்ட் காசாவை ஆட்சி செய்யவில்லை. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது. போருக்கு முன் காசாவில் மொத்த மக்கள் தொகை 23 லட்சம். இதில் 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு விட்டனர்.