உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாஸ் உச்ச தலைவன் சின்வார் மனைவி பற்றி பகீர் | israel vs hamas | yahyah sinwar wife | idf | mossad

ஹமாஸ் உச்ச தலைவன் சின்வார் மனைவி பற்றி பகீர் | israel vs hamas | yahyah sinwar wife | idf | mossad

2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் 1200 பேரை கொன்று குவித்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அன்று முதல் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். பயங்கரவாத அமைப்பின் உச்ச தலைவனாக இருந்த இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து குண்டு வீசி கொன்றது இஸ்ரேல். அடுத்து உச்ச தலைவர் பதவிக்கு வந்த யாஹ்யா சின்வாரை, தெற்கு காசாவில் உள்ள ஒரு கட்டடத்துக்குள் வைத்து துல்லியமாக குண்டு போட்டு கொன்றது இஸ்ரேல் ராணுவம். அவன் மரண தருவாயில் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. யாஹ்யா சின்வாருக்கு பிறகு பதவிக்கு வந்த அவனது தம்பி முகமது சின்வார் கதையையும் இஸ்ரேல் முடித்தது. இந்த நிலையில்ல தான் சின்வாரின் மனைவி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இஸ்ரேல் ராணுவம் கண்ணில் இருந்து தப்புவது கடினம் என்பதை ஏற்கனவே உணர்ந்து இருந்த யாஹ்யா சின்வார், தனது மரணத்துக்கு முன்பே மனைவி, குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறான். அவனது மனைவி பெயர் சமர் முகமது அபு ஸாமர். இவர் போலி பாஸ்போர்ட் மூலம் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, அண்டை நாடு வழியாக துருக்கிக்கு தப்பி ஓடி இருக்கிறார்.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !