ஹமாசின் கொடூர செயல்! சுரங்கத்தில் திக் திக் Israel vs Hamas | Hamas tunnel video released by Israel
2023 அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீன் போர் வெடித்தது. 11 மாதங்கள் தாண்டியும் போரின் தீவிரம் குறைந்தபாடில்லை. முதலில் தாக்குதலை துவங்கியது பாலஸ்தீன் தான். அங்குள்ள ஹமாஸ் வீரர்களும், பாலஸ்தீன் வீரர்களும் சேர்ந்து இஸ்ரேலை தாக்கினர். அன்றைய தினம் உலகம் முழுதும் உள்ள யூதர்கள் பிளாக் சப்பாத் என்ற பண்டிகை கொண்டாடிக்கொண்டு இருந்தனர். மேற்கு இஸ்ரேலில் நோவா டான்ஸ் என்னும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு புகுந்த ஹமாஸ் வீரர்கள் நிகழ்ச்சிக்கு வந்த மக்களை குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளினர். அதே நேரம் பல இடங்களில் இருந்து இஸ்ரேல் மீது ஒரே சமயத்தில் ஏவுகணைகளை மழை போல் பொழிந்தது ஹமாஸ் படை. ஒரே நேரத்தில் மொத்தம் 4,700 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது போட்டது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் நிலைகுலைந்தது.