அயன்டோமை கிழித்த ஹெஸ்புலா குண்டு-பரபரப்பு காட்சி | Israel vs Hezbollah | Hezbollah missile video
இஸ்ரேல்-ஹெஸ்புலா போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு பக்கம் தீவிர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல்-ஹெஸ்புலா இடையே கடும் சண்டையும் நடக்கிறது. தினமும் 100 முதல் 200 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி வருகிறது ஹெஸ்புலா. இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புலா முகாம்களை குறி வைத்து சில நாட்களாக இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில் ஹெஸ்புலாவுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. கட்டுமானங்கள் தரைமட்டமாகின. ஆயுதங்கள் அழிந்தன. முக்கிய நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க திங்கள் இரவில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது ஹெஸ்புலா. அவை டெல் அவிவ் நகர் வரை வந்து விழுந்ததால் இஸ்ரேல் கடும் அதிர்ச்சி அடைந்தது. இந்த தாக்குதலில் பெண் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் சீரியசாக உள்ளார். ஹெஸ்புலா ஏவுகணைகள் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியை நெருங்கும் காட்சிகள் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன