ஹெஸ்புலா சுரங்கத்தில் சினிமாவை மிஞ்சிய திடுக் காட்சி | Israel vs Hezbollah | Hezbollah tunnel video
காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்து இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. ஹமாசும், ஹெஸ்புலாவும் சுரங்கம் தோண்டுவதிலும், பதுங்கு குழிகள் அமைப்பதிலும் கில்லாடிகள். இப்போது ஹெஸ்புலாவை குறி வைத்து தெற்கு லெபனானில் தரை வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், அவர்களின் சுரங்கங்களை கைப்பற்றி அழித்து வருகிறது. 2 நாட்கள் முன்பு லெபனானில் உள்ள அமைதிப்படை பாதுகாப்பு கோபுரத்துக்கு 200 மீட்டர் பக்கத்தில் ஹெஸ்புலா தோண்டி இருந்த சுரங்கத்தை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்தது. அதில் இருந்த வெடிமருந்துகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளையும் இஸ்ரேல் வீரர்கள் கைப்பற்றினர். இப்போது தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி இருக்கும் ஹெஸ்புலா சுரங்கம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. தரைக்கு கீழ் ஆழமாக தோண்டி பதுங்கு குழி அமைத்துள்ள ஹெஸ்புலா, அதை வீடு போன்று வடிவமைத்துள்ளது. அந்த பதுங்கு குழி விசாலமானதாக இருக்கிறது. சகல வசதிகளும் உள்ளே உண்டு. அறைகளில் இருப்பது போல் சுவர் அமைத்துள்ளனர். கொல்லப்பட்ட ஹெஸ்புலா தலைவன் ஹசன் நஸ்ரல்லா படம் சுவரில் இருந்தது. அறைகளில் பயங்கரவாதிகள் படுக்க பல மெத்தையுடன் கூடிய பல பெட்கள் போட்டுள்ளனர். போதிய வெளிச்சம் தர விளக்குகள் உள்ளன. உள்ளேயே குளியல் அறை, டாய்லட், ஃபேஸ் வாஸ் வசதி உள்ளது. சாப்பிடவும் வித, விதமான உணவு வகைகளை வைத்துள்ளனர். ஏராளமான ஸ்கூட்டர்களும் அந்த பதுங்கு குழிக்குள் இருந்தன.