இஸ்ரேலின் புதிய போர் அறிவிப்பு... எகிறிய பதட்டம் | Israel vs Hezbollah | Pager walkie-talkies Blast
வந்த ஹிஸ்புல்லாவை பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் என கற்பனை செய்ய முடியாத நூதன தாக்குதலை அடுத்தடுத்து நடத்தி நிலைகுலைய வைத்து இருக்கிறது இஸ்ரேல். செவ்வாய்க்கிழமை பேஜர் அட்டாக் நடந்தது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் வைத்திருந்த 5000 பேஜர்கள் அரை மணி நேரத்துக்குள் வெடித்து சிதறின. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 12 பேர் மரணம் அடைந்தனர். 2800 பேர் காயம் அடைந்தனர். இதில் 100 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மறுநாளே வாக்கி டாக்கி அட்டாக் நடந்தது. பேஜர் போலவே ஹிஸ்புல்லாக்களின் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 450 பேர் பலத்த காயம் அடைந்தனர். இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியது.