உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகம் பார்க்காத இஸ்ரேலின் அதிபயங்கர அட்டாக்-என்ன நடந்தது Israel vs Hezbollah | Pager Blast | Mossad

உலகம் பார்க்காத இஸ்ரேலின் அதிபயங்கர அட்டாக்-என்ன நடந்தது Israel vs Hezbollah | Pager Blast | Mossad

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா எனப்படும் ஆயுதம் தாங்கிய அமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய விநோதமான கொடூர தாக்குதல் உலகையே அதிர வைத்துள்ளது. வெறும் முப்பதே நிமிடம் தான். ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறின. 11 பேர் இறந்தனர். 3 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். 100 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முதலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஜரின் பேட்டரி வெடித்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் அவ்வளவு பேஜரும் வெடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு தான் இது இஸ்ரேலின் வேலை என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்ட துவங்கியது. உண்மையில் என்ன நடந்தது? இப்படியொரு மர்மமான தாக்குதலை இஸ்ரேல் எப்படி செய்திருக்க முடியும்? இந்த கொடூர தாக்குதல் ஏற்படுத்தி இருக்கும் விளைவு என்ன? என்பதை பார்க்கலாம்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !