பதைபதைக்க வைக்கும் இஸ்ரேல் தாக்குதல் வீடியோ | Israel vs Hezbollah | Israel attack video | IDF video
இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளுக்கும் இடையேயான ஒரு வருட சண்டை 2 மாதம் முன்பு போராக வெடித்தது. இப்போது போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தீவிரமாக நடக்கிறது. ஆனாலும் போரின் தீவிரம் குறையவில்லை. லெபனானில் உள்ள ஹெஸ்புலா முகாம்களை குறிவைத்து தரை மற்றும் வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பதிலுக்கு தினமும் 100 முதல் 200 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி வருகிறது ஹெஸ்புலா. நேற்று வடக்கு இஸ்ரேலில் உள்ள Metula என்ற ஊருக்கு பக்கத்தில் ஹெஸ்புலா வீசிய ராக்கெட் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஊருக்கு அருகே உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலை பார்த்தபோது தான் குண்டு வெடிப்பில் மரணம் அடைந்தனர். ஒருவர் இஸ்ரேலை சேர்ந்த தொழிலாளி. மற்றவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள். கடைசி ஓராண்டில் இஸ்ரேல் எதிர்கொண்ட மிகப்பெரிய இழப்புகளில் இதுவும் ஒன்று. இதன்மூலம் ஓராண்டாக நடக்கும் ஹெஸ்புலாவுக்கு எதிரான சண்டையில் இஸ்ரேலில் நடந்த மரணங்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. ஹெஸ்புலா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இன்று அதிகாலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் பொளபொளவென சரிந்து விழுந்தன. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. குண்டு வீச்சு மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது.