இஸ்ரேல் வெளியிட்ட திடுக்கிடும் வீடியோ Israel vs Hizbollah | Israel video release | IDF viral video
லெபனான் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான சண்டை முற்றி விட்டது. பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக், ஹிஸ்புல்லா ராட்வான் படை தளபதி இப்ராகிம் அகில் கொலை என அடுத்தடுத்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை தெறிக்கவிட்ட இஸ்ரேல், திங்கட்கிழமை மற்றொரு இடியை இறக்கியது. சண்டையின் அடுத்த கட்டத்துக்கு இஸ்ரேல் சென்று விட்டது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் இலக்குகளை அழிக்கும் வரை இனி ஓயாது. அப்பாவி மக்கள் வீடுகளில் தான் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. ஆயுதங்கள் இருக்கும் வீடுகள், குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த கையோடு தாக்குதலை துவங்கியது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா நிலைகுலைந்தது. லெபனானில் 558 பேர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்களை இஸ்ரேல் குறி வைத்து தாக்குவதாக ஈரானும், ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்பும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. இந்த நிலையில் முதல் நாள் தாக்குதல் முடிந்ததும் இஸ்ரேல் ராணுவம் திடுக்கிடும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு உலகையே அதிர வைத்தது. தெற்கு லெபனானில் உள்ள அப்பாவி மக்கள் வீடுகளில் ஹிஸ்புல்லா எவ்வளவு ஆயுதங்களை, எப்படி எல்லாம் பதுக்கி வைத்து இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் இஸ்ரேல் அம்பலப்படுத்தியது. அந்த வீடியோவில் அப்படி என்ன இருந்தது என்பதை பார்க்கலாம்.