உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2500km பறந்து ஏமனில் இறங்கி அடித்த இஸ்ரேல்-வீடியோ | israel vs houthi | hodeidah | idf attack video

2500km பறந்து ஏமனில் இறங்கி அடித்த இஸ்ரேல்-வீடியோ | israel vs houthi | hodeidah | idf attack video

காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை ஹமாஸ் முழுமையாக விடுவிக்காததால், ஜனவரியில் அமல்படுத்திய 2 மாத போர் நிறுத்தத்துக்கு பிறகு மீண்டும் போரை துவங்கியது இஸ்ரேல். ஏற்கனவே ஹமாசுக்கு ஆதரவாக இறங்கிய ஹெஸ்புலா, இஸ்ரேல் கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் சண்டையில் இருந்து பின் வாங்கி விட்டது. ஆனால் ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் ஹமாசுக்கு ஆதரவாக தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஏவி விடும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானிலேயே இஸ்ரேல் தவிடுபொடியாக்கி வருகிறது. இருப்பினும் ஏப்ரல் இறுதியில் ஹவுதி வீசிய பாலிஸ்டிக் ஏவுகணை, இஸ்ரேலின் முக்கிய ஏர்போர்ட்டான டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் பகுதியில் விழுந்து வெடித்தது. உடனடியாக ஏர்போர்ட் மூடப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டது. சில மணி நேரம் கழித்து இயல்புநிலை திரும்பியது. இஸ்ரேலின் அயர்ன்டோம் போன்ற ஏவுகணை தடுப்பு சிஸ்டத்தை ஹவுதி ஏவுகணை ஊடுருவியது ராணுவத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. மக்களுக்கு பாதிப்பு என்றாலும், இஸ்ரேலுக்கு இது கவுரவ பிரச்னையாக மாறி விட்டது. இதனால் ஹவுதிக்கு 7 மடங்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் 20 போர் விமானங்கள் ஏமனுக்கு பறந்து, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் Hodeida துறை முகம் மற்றும் Bajil நகரில் உள்ள ஹவுதிகள் முகாம்களை குண்டு வீசி தகர்த்தன. அதோடு ஆட்டம் நிற்கவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் பயங்கர அட்டாக் நடந்தது. இந்த முறை ஏமன் தலைநகர் சனாவில் இருக்கும் பிரதான ஏர்போர்ட்டில் இஸ்ரேல் குண்டு வீசியது. ஏர்போர்ட் மொத்தமும் தீக்கிரயைானது. சில விமானங்களும் தீப்பிடித்து கருகின. இப்படியே அடுத்தடுத்து மொத்தம் 7 முறை இஸ்ரேல் போர் விமானங்கள் ஏமனில் குண்டு மழை பொழிந்தன. நெதன்யாகு சொன்னது போல் ஹவுதிக்கு 7 மடங்கு பதிலடியை இஸ்ரேல் கொடுத்தது. கடைசி அட்டாக் மே 6ம் தேதி நடந்தது. இந்த நிலையில் மீண்டும் ஹவுதிகள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இஸ்ரேலை நோக்கி மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசினர். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு விசிட் வந்தார். சவுதி, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். இந்த பயணம் நேற்று முடிந்தது. மீண்டும் அமெரிக்கா திரும்பினார் டிரம்ப். அவர் திரும்பும் வரை இஸ்ரேல் பொறுமையுடன் காத்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் இஸ்ரேல் மீது 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 ட்ரோன்களை வீசி இருந்தது ஹவுதி படை. டிரம்ப் புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களில் ஆட்டத்தை ஆரம்பித்தது இஸ்ரேல். ஒரே நேரத்தில் 15 போர் விமானங்கள் இஸ்ரேலில் இருந்து புறப்பட்டன. இவற்றுக்கு முன்னாள் சில உளவு விமானங்கள் பறந்து சென்று வழிகாட்டின. கூடவே நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களும் பறந்தன. ஏமனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஹொடைடா Hodeidah, சாலிஃப் Salif ஆகிய 2 துறைமுகங்கள் மீதும் சரமாரியாக குண்டு வீசின. ஒரே நேரத்தில் சக்திவாய்ந்த 35 குண்டுகளை இரு துறைமுகங்கள் மீதும் வீசின. இதில் சின்னாப்பின்னமாக துறைமுகங்கள் சிதறின. 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் பறந்து சென்று தாக்குதல் நடத்திய போர் விமானங்களும், மற்ற விமானங்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பின. தாக்கப்பட்ட இரு துறைமுகங்களும் ஹவுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஈரான் அனுப்பும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் எல்லாம் இந்த துறைமுகங்கள் வழியாக தான் ஹவுதிக்கு கைமாறுகின்றன. எனவே தான் இவற்றை துல்லியமாக தாக்கினோம் என்று இஸ்ரேல் சொன்னது. துறைமுகங்களில் இனி 80 மீட்டர் நீளத்துக்கு மேல் கப்பல்களை நிறுத்த முடியாது. துறைமுகத்தை சரி செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதம் மேல் ஆகும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்த ஆப்ரேஷன் நடந்த போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ராணுவ தளபதி, அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்தனர். ஆப்ரேஷன் முடிந்ததும் ஹவுதிகளுக்கு பகிரங்கமாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் மிரட்டல் விடுத்தார். ‛நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம். இஸ்ரேல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு வலிக்க வலிக்க அடி கொடுப்போம். ஹவுதி பயங்கரவாத தலைவன் அப்துல் மாலிக் அல் ஹவுதியையும் ஏமனில் வைத்தே தீர்த்துக்கட்டுவோம். எப்படி காசாவில் வைத்து ஹமாஸ் தலைவர்கள் சின்வார், டெஃய்ப் கொன்றோமா; லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து ஹெஸ்புலா தலைவன் நஸ்ரல்லா தீர்த்துக்கட்டினோமோ, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குள் புகுந்து ஹமாஸ் தலைவன் இஸ்மாயில் ஹனியேவை போட்டுத்தள்ளினோமா, அதே போல் அப்துல் மாலிக் அல் ஹவுதியையும் கொலை செய்வோம். இஸ்ரேலையும் இஸ்ரேல் மக்களையும் காக்க எங்கள் பலத்தால் எதிரிகளை அழிப்போம் என்று ராணுவ அமைச்சர் காட்ஸ் சொன்னார்.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி