பகீர் கிளப்பும் இஸ்ரேலின் பைபிள் வசன ரகசியம் | israel vs iran | iran nuclear sites | op rising lion
ஈரானிடம் இப்போது அணு ஆயுதம் இல்லை. அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இது பிடிக்கவில்லை. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால், தங்கள் மக்களுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதின. இது தொடர்பாக ஈரானை தொடர்ந்து எச்சரித்தன. அமெரிக்காவுடன் ஈரான் நடத்திய பேச்சும் தோல்வியில் முடிந்தது. சந்தர்ப்பம் தேடி காத்திருந்த இஸ்ரேல் இன்று ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், அன்டர் கிரவுன்ட் ஆராய்ச்சி கூடங்களை குண்டு வீசி தகர்த்தது. ஈரானின் ராணுவ தளங்களையும் நொறுக்கியது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, ஈரானின் அனைத்து ராணுவ படைகளின் தளபதி முகமது ஹூசைன் பகேரி, புரட்சிகர காவல் படை தளபதி சலாமி உட்பட 3 தளபதிகளையும், 2 அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்றது. கடைசி 45 ஆண்டுகளில் ஈரான் பார்த்திருக்காத கொடிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.