ஹவுதிகளை விரட்டி விரட்டி வேட்டையாடிய இஸ்ரேல்: பகீர் அட்டாக் | Israeli airstrike | Yemen | Houthi
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 2023ல் ஆரம்பமான போர் இன்னும் ஓயவில்லை. இந்த போரில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. காசாவுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் அவ்வப்போது ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஏமனின் ஏவுகணை தளங்கள், ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து மின் உற்பத்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட ஏமனின் உள்கட்டமைப்புகளையும் இஸ்ரேல் துவம்சம் செய்தது. இஸ்ரேல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு வலிக்க வலிக்க அடி கொடுப்போம் என ஏற்கனவே இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் மிரட்டி இருந்தார்.