உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல்-ஈரான் போர் உறுதி-கமெனி அதிரடி முடிவு Israel vs Iran | Israel attacks Iran | IDF | Khamenei

இஸ்ரேல்-ஈரான் போர் உறுதி-கமெனி அதிரடி முடிவு Israel vs Iran | Israel attacks Iran | IDF | Khamenei

ஈரான் ஆதரவுடன் காசாவில் செயல்படும் ஹமாஸ், லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவன் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலின் போது, ஹெஸ்புலாவின் உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் ராணுவம் தீர்த்துக்கட்டியது. முக்கிய தலைவர்களை கொன்றதால், இதற்கு பதிலடி கொடுக்க அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை பொழிந்தது. ஒரே நேரத்தில் 200 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை இஸ்ரேல் மீது வீசியது. இஸ்ரேலின் நேவாடியம் விமானப்படை தளம் சேதம் அடைந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. அதன்படி 25ம் தேதி இரவில் ஈரானுக்கு பதிலடி கொடுக்க துவங்கியது. இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்தன. அதன் தலைநகர் டெஹ்ரான் உட்பட முக்கிய இடங்களில் செயல்படும் 20 ராணுவ தளங்களை குறி வைத்து துல்லிய தாக்குதலை நடத்தின. இரவு முதல் அதிகாலை வரை மொத்தம் 3 முறை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் 100 போர் விமானங்கள் பறந்து சென்று நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் வீசிய குண்டுகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து விட்டோம் என்று சொன்ன ஈரான், இந்த தாக்குதலில் லேசான சேதம் ஏற்பட்டதாகவும், 4 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டது. இருப்பினும் இஸ்ரேலின் தாக்குதல் எதிர்பார்த்ததை விட குறைவு தான்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ