உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் செய்த காரியம்... ஈரானை உலுக்கிய இறுதி ஊர்வலம் israel vs iran | iran hold state funeral video

இஸ்ரேல் செய்த காரியம்... ஈரானை உலுக்கிய இறுதி ஊர்வலம் israel vs iran | iran hold state funeral video

1322 60 சவப்பெட்டியில் முக்கிய புள்ளிகள் ஈரானை உலுக்கிய இறுதி ஊர்வலம்! இஸ்ரேல் செய்த பயங்கரம் திரண்டு வந்த ஈரானியர்கள் இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் நடந்த பயங்கர போர் மொத்த உலகத்தையும் பதைபதைக்க வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை எதிர்த்து 13ம் தேதி போரை துவங்கிய இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி கூடங்களான நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகளை துல்லியமாக குண்டு வீசி கொலை செய்தது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா, கத்தார் மத்தியஸ்தம் செய்து 24ம் தேதி சண்டையை நிறுத்தின. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர். ஈரானில் 630 பேர் இறந்ததாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகள், அவர்களது குடும்பத்தினர் 60 பேரின் இறுதிச்சடங்கு இன்று டெஹ்ராவில் நடந்தது. அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. தளபதிகள், அணு விஞ்ஞானிகளின் சடலம் இருந்த சவப்பட்டிக்கு ஈரான் நாட்டு கொடியை போர்த்தி இருந்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. பல ஆயிரம் மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கருப்பு உடை அணிந்து வந்து இருந்தனர். அமெரிக்காவை அழிப்போம்; இஸ்ரேலை அழிப்போம் என்று விண் அதிர கோஷம் போட்டனர். இஸ்ரேல் நடத்திய ‛டார்கெட் கில்லிங்கால் இந்த போரில் ஈரானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை