உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பறந்து அடித்த இஸ்ரேல் இனி இறங்கி அடிக்க திட்டம் israeli invasion| hezbollah vows to fight Hamas head

பறந்து அடித்த இஸ்ரேல் இனி இறங்கி அடிக்க திட்டம் israeli invasion| hezbollah vows to fight Hamas head

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள், கமாண்டர்களை தேடித்தேடி குண்டு வீசி கொன்று வருகிறது. தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல முக்கிய தலைவர்களை ஹிஸ்புல்லா இழந்து நிலைத்தடுமாறி நிற்கிறது. இச்சூழலில், லெபனானில் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் லெபனான் பிரிவு தலைவர் ஃபதே ஷெரிப் fateh sherif கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ஃபதே ஷெரிப், லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் ஹமாஸை ஒருங்கிணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஹமாசுக்கு செயற்பாட்டாளர்களை நியமிப்பது, ஆயுதங்களை பெறுதல் போன்றவற்றுக்கு அவர் பொறுப்பு ஏற்று இருந்தார் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதுவரை விமானப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தரைவழியாக லெபனானுக்குள் இறங்கி அடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக லெபனான் எல்லையில் இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு பதில் அளித்துள்ள ஹிஸ்புல்லா துணைத்தலைவர் நைம் காசிம், இஸ்ரேலை எதிர்த்து நீண்ட போருக்கு தயார் என்று அறிவித்துள்ளார். இஸ்ரேல் தரை வழி தாக்குதல் நடத்த முடிவு செய்தால், அதை எதிர்த்து போராடவும், லெபனானை பாதுகாக்கவும் ஹிஸ்புல்லா தயாராக இருக்கிறது. இஸ்ரேல் தாக்குததால் எங்கள் ராணுவ திறன்கள் பாதிக்கவில்லை. ஒரு தளபதி காயமடையும்போது, குழுவை வழிநடத்த துணை தளபதி இருக்கிறார்கள். எங்களின் பல தளபதிகள் கொல்லப்பட்டபோதும், புதிய தளபதிகளை நம்பி இருக்கிறோம் என ஹிஸ்புல்லா துணைத்தலைவர் காசிம் கூறியுள்ளார். காஸாவின் ஹமாஸ், லெபானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதி பயங்கரவாத குழுக்களின் பின்னால் இருந்து உதவுவது ஈரான். இந்த 3 பயங்கரவாத குழுக்கள் மீதும் இஸ்ரேல் ஒருசேர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்க கூடும் என யூகங்கள் எழுந்தன. ஆனால், இஸ்ரேலை எதிர்கொள்ள லெபனான், காஸாவுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என ஈரான் வெளியுறவு அதிகாரி நாசர் கனானி தெரிவித்தார்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !