உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்புல்லாவுக்கு நெதன்யாகு மெசேஜ் இதுதான் Israel vs Hezbollah | Benjamin Netanyahu video | Ceasefire

ஹிஸ்புல்லாவுக்கு நெதன்யாகு மெசேஜ் இதுதான் Israel vs Hezbollah | Benjamin Netanyahu video | Ceasefire

லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு எதிராக போருக்கு நிகரான தாக்குதலை திங்கட்கிழமை இஸ்ரேல் துவங்கியது. அதற்கு சில நாட்கள் முன்பு ஹிஸ்புல்லாக்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் தான் தீவிர சண்டைக்கு வித்திட்டது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்துகிறது. திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்கள் நடந்த தீவிர சண்டையில் லெபனானில் மட்டும் 700 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலுக்கு பெரிய சேதம் எதுவும் இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். இஸ்ரேல், ஹிஸ்புல்லா சண்டையால் லெபனான்-இஸ்ரேல் எல்லையின் இரு பக்கமும் பல ஆயிரம் மக்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது. இதற்கிடையே அமெரிக்காவும், பிரான்சும் போர் நிறுத்தத்தை கொண்டு வர முயற்சி மேற்கொண்டன. இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் 21 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று இரு நாடுகளும் கூட்டாக அழைப்பு விடுத்தன. அமெரிக்கா, பிரான்ஸ் அழைப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக தகவல் பரவியது. இதனால் உடனடியாக போர் நிறுத்தம் வரும் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி