இஸ்ரேல் செய்த மிகப்பெரிய சம்பவம் இதுதான் | Israel vs Hizbollah | who is Ibrahim Aqil | pager attack
ஏற்கனவே ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், இப்போது லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை எதிர்த்தும் தீவிர சண்டையில் களம் இறங்கி உள்ளது. உலகையே அதிர வைத்த பயங்கர திட்டத்தின் மூலம் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய 3000 பேஜர், பல நூறு வாக்கி டாக்கிகளை இஸ்ரேல் வெடிக்க செய்தது. கடைசி தகவல் தொடர்பு சிஸ்டத்தையும் இழந்த ஹிஸ்புல்லா பல வீரர்களையும் பறிகொடுத்தது. மொத்தம் 32 பேர் மரணம் அடைந்தனர். 3 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் பலர் சீரியசாக இருக்கின்றனர். இஸ்ரேலின் நூதன தாக்குதலுக்கு பிறகு தான் மோதல் புதிய உச்சத்தை தொட்டது. இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் மாறி மாறி குண்டு வீச துவங்கினர். ஹிஸ்புல்லாவுக்கு அடுத்த அடி விழுந்தது. முக்கிய படை தளபதியான இப்ராகிம் அகிலை Ibrahim Aqil கொன்று ஹிஸ்புல்லா தலையில் இடியை இறக்கியது இஸ்ரேல். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த இப்ராகிமை துல்லிய தாக்குதல் மூலம் போட்டுத்தள்ளியது இஸ்ரேல் ராணுவம். இப்ராகிம் அகில் சாதாரணமானவன் அல்ல. இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள், இத்தாலியர்கள், லெபனான் மக்கள் என பல நூறு பேரை கொன்று குவித்த மிகப்பெரிய பயங்கரவாதி. ஹிஸ்புல்லாவின் அதிமுக்கிய தலைவனான அவனை இஸ்ரேல் போட்டுத்தள்ளியது எப்படி? அவன் செய்த சம்பவங்கள் என்ன? அமெரிக்கா அவனை தேடி வந்தது ஏன்? என்பதை பார்க்கலாம்.