இஸ்ரேலுக்கு எதிராக வந்த நாடுகள்-இந்தியா செய்த சம்பவம் israel vs iran | india on israel vs iran | SOC
ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பெரிய அளவில் பகை இருக்கிறது. இதை எதிர்கொள்ள அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. உடனே ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்களை 200 போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் குண்டு வீசி தாக்கியது. ஈரானின் பிரதான தலைமை தளபதி முகமது பகேரி, புரட்சிகர ராணுவ படையின் தளபதி சலாமி உட்பட 5 முக்கிய தளபதிகளை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்றது. அதே போல் அணு சக்தி விஞ்ஞானிகள் 9 பேரையும் குண்டு வீசி கொன்றது. இந்த தாக்குதலில் மொத்தம் 80 பேர் கொல்லப்பட்டனர். 380 பேர் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 60 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.