அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பந்தாடும் இஸ்ரோவின் சாதனை | ISRO | PSLV-C60 | SPADEX Mission
3 நாடுகளில் மட்டுமே உள்ள டெக்னாலஜி! வானில் இஸ்ரோ நடத்தி காட்டிய அற்புதம் ஸ்பேடெக்ஸ் எனப்படும் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்பம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா வசம் மட்டுமே உள்ளது. அதில் நான்காவது நாடாக நடத்தி காட்டி சாதனை படைக்கும் முயற்சியில் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்ட சோதனை முயற்சியாக பிஎஸ்எல்வி - சி 6-0 ராக்கெட்டை கடந்த டிசம்பர்30ல் இஸ்ரோ ஏவியது. இதில் வேறு சில செயற்கைக் கோள்களுடன் சேசர் மற்றும் டார்கெட் என்று இரண்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டன. தலா 220 கிலோ எடையுள்ள இவை பூமியில் இருந்து 475 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டன. இரண்டு செயற்கைக்கோள்களையும் விண்வெளியில் சுற்றிவரும் போதே ஒருங்கிணைக்க கடந்த ஜனவரி 7 மற்றும் 9ம் தேதிகளில் முயற்சிகள் நடந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நேரத்தில் அவை நிறுத்தப்பட்டன. வெவ்வேறு திசையில் பயணித்த அந்த செயற்கைக்கோள்களை மீண்டும் ஒருமுகப்படுத்தும் பணி நடந்தது.