தனியார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய HAL | small sat launch vehicles | ISRO
இஸ்ரோவுடன் கை கோர்த்தது HAL எகிறப்போகும் ராக்கெட் உற்பத்தி வணிக ரீதியில் செயற்கைக்கோள் ஏவும் சந்தையில் இந்திய பெரிய அளவில் வாய்ப்புகளை பெற திட்டமிட்டுள்ளது. எல் அண்டு டி, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்கள், சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே இந்த நிறுவனங்கள், இஸ்ரோவிற்கு ராக்கெட் உற்பத்தி செய்து வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை இவை இஸ்ரோவுக்கு தயாரித்து வழங்க உள்ளன. பி.எஸ்.எல்.வி திட்டத்தை தொடர்ந்து இன்ஸ்பேஸ் எனப்படும், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பு 2023 ஜூலை மாதம், எஸ்.எஸ்.எல்.வி., திட்டத்திற்கான ஏல செயல்முறையைத் துவங்கியது.