41 ஆண்டுக்கு பின் விண்வெளியில் இந்தியா செய்த முக்கிய சம்பவம் shubhanshu shukla | axiom-4 | isro ISS
சர்வதேச விண்வெளி மையம் பறந்த முதல் இந்தியர் சுக்லா உடன் அல்வா இஸ்ரோ மாஸ்டர் பிளான் ISS-ல் என்ன நடக்கும்? விண்வெளி அரங்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு சிறப்பான ஒரு பெருமை கிடைத்து இருக்கிறது. 2வது முறையாக இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு பறந்து இருக்கிறார். 1984ல் இந்தியாவின் ராகேஷ் சர்மா முதன் முறையாக விண்வெளிக்கு சென்றார். அதன் பிறகு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா இப்போது விண்வெளிக்கு பறந்து இருக்கிறார். சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், போலந்தை சேர்ந்த ஸ்லாவேஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்கு பறக்கின்றனர். அமெரிக்காவின் பெக்கி விட்சன் தான் இந்த குழுவை வழிநடத்தி செல்கிறார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரு டிராகன் விண்கலத்தில் 4 பேரும் புறப்பட்டனர். சரியாக மதியம் 12 மணி ஒரு நிமிடத்துக்கு விண்கலத்தை சுமந்து செல்லும் பால்கன்-9 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது