உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெகன் மோகன் ரெட்டியை விசாரிக்க போலீஸ் முடிவு | Jagan Mohan Reddy | Liquor scam Case | Andhra

ஜெகன் மோகன் ரெட்டியை விசாரிக்க போலீஸ் முடிவு | Jagan Mohan Reddy | Liquor scam Case | Andhra

ஆந்திராவில் 2019 - 2024ல் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது அவரது கட்சி நிர்வாகிகள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து அதிகளவில் மதுபானங்கள் வாங்கியதாகவும், இதற்காக லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரான அவரது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த ராஜசேகர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காவலில் எடுப்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின்போது, ஏ.பி.எஸ்.பி.சி.எல்., எனப்படும் ஆந்திரா மாநில மதுபான வாரியம் வாயிலாக மதுக்கடைகளை திறப்பதற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கு முன், மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் வாங்குவதற்கு கம்ப்யூட்டர் வாயிலான நடைமுறை அமலில் இருந்தது. இதன்படி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே வாங்க முடியும். ஆனால் இந்த நடைமுறையை கைவிட்டு,

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி